காற்று அவள் முடிக் கற்றைகளை கலைத்து விட, நான் அந்த மலர் முகத்தினை இரு கரங்களிலும் ஏந்திக் கொண்டு என் விழிகளால் அவள் விழிகளை ஆராய்கிறேன் .
கருவண்டு கண்கள் எனை காதலாய் நோக்கிட. கவிதையான சொற்களை உதிர்க்க அவள் செய்வாய் திறக்க நான் என் ஒற்றை விரல் கொண்டு தடுக்கிறேன்.
கவிதை எழுதி அதை உரையில் இட்டு நிலா வரும் வரையில் காத்திருந்தான் கதிரவன்
நிலாவும் வர துடித்துக் கொண்டு இருந்தது,
இரவு பகலாகி என் நினைவு நெருப்பாகி சுட்டெரிக்க நீ எங்கே என் வானம் முழுவதிலும் தேடுகிறேன், அங்கே தொலைவில் காதலன் சூரியன் என் கருப்பு போர்வை தனை நீக்கி வான வீதியில் மேகத் தோட்டத்தில் என் பிறை நெற்றியில் ஒற்றை விரல் கொண்டு நட்சத்திர திலகமிடும் என் மணவாளன் .
அவனின் ஒற்றை உரசலை கேட்கிறேன் . தீயை போலே எரியும் அவன் பகலை குளிராய் மாற்றிட அவனின் இரவுக் காதலி நிலா வருகிறாள் என்று சொல்லுகிறீர்களா?
அன்னத்தை தூது விட நேரம் இல்லை. ,மடல் எழுதிட விரல்களில் சக்தி இல்லை. என் மன குமுறல்களை எல்லாம் நட்சத்திரமாய் கொட்டி வைத்தேன் என்னை காண வரும் சூரிய காதலனின் வருகைக்காக காத்திருந்து சூனியமான என் இரவு தனை வெளிச்சமாக வா வா வா....


0 comments:
Post a Comment