தூறிய மழைக்குப் பயந்து நைந்து போன சேலையை இறுகத் தலையைச் சுற்றியபடி வந்தாள் பொன்னுத்தாயி !கதவென்று பெயருக்கு வைக்கப்பட்டு இருந்த தட்டியைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தாள். மகன் கதிரேசன் சாயம் இழந்த சுவரில் சாய்ந்தபடி படித்துக் கொண்டிருந்தான். பழக்கூடையை ஓரமாய் வைத்துவிட்டு அடுக்களைக்குள் சென்றாள். பசி வயிற்றைக் கிள்ள, பாத்திரங்களை எடுக்கும் போதுதான், மகன் இன்னமும் சாப்பிடவில்லை என்பதை தெரிந்தது. ஏலே ! கதிரு, மணி பத்தாவப் போகுது,
அவனிடம் மெளனம், ஆனால் மிக மெல்லியதாய் விசும்பல் ஒலி கேட்கவும் விதிர் விதிர்த்துப் போய் மகனிடம் நின்றாள். பணம் கட்ட இன்னும் மூணுநாள் தான் இருக்கு, நீ இதுவரையில் பணம் தரலை, எல்லாரும் கிண்டல் பண்றாங்க, எனக்கு அவமானமா இருக்கு!
எம்புட்டு பணமின்னுசொன்னே?
ஆயிரம் ரூபாய் !
இரண்டு மாசத்துக்கு முன்னாடிதானே நான் எண்ணூறு ரூவா தந்தேன்,
அது வேற இது வேற.,
அய்யா நானென்ன அரசாங்க உத்தியோகமா பாக்குறேன். தெருத்தெருவா பழம் விக்கிறேன். வர்ற காசு வாய்க்கும் வயித்துக்குமே பத்தாமப் போனாலும், கடன் பட்டாவது உன்னைப் படிக்க வைக்கிறேன், அடிக்கடி இப்படி பணம் கேட்டா எப்படிப்பா?
அப்போ என்னையேன் கல்லூரியில் படிக்க வைச்சே. உன்னை மாதிரியே கறிகா விக்க வைச்சிருக்கலாமே ?! மகனின் அந்தக் கேள்வியில் ரொம்பவே மனமுடைந்து போனாள் பொன்னுத்தாயி !
என்னய்யா, நீயே இப்படிப் பேசறே? உங்கப்பன் நம்மை விட்டுட்டுப் போன பொறவு நான் உன்னைப் படிக்க வைக்க வளர்க்க, என் தோலைச் செருப்பா தைச்சுப் போடுறேனே! அது உனக்குப் புரியலையாய்யா?
அதுக்கு நீ என்னை இத்தனை பெரிய கல்லூரியிலே சேர்த்து இருக்கப்படாது, என் வயசுப் பசங்களெல்லாம் நல்லா துணிமணி உடுத்திட்டு வர்றாங்க. நானென்ன அதெல்லாம் கேட்டு உன்னைத் தொந்தரவு செய்யறேனா?
கோவிக்காதேய்யா ! நானென்னத்தைக் கண்டேன்,இன்னும் இரண்டு நாள் பொறுத்துக்கோ, சண்முக அய்யாகிட்டே கேட்டுப் பாக்கிறேன். இப்போ சாப்பிடவாய்யா, என்றாள் மகனின் மோவாயைத் தாங்கியபடி,
எனக்கு வேண்டாம் நீயே போய்ச் சாப்பிடு,! அவன் திரும்பிப் படுத்துவிட்டான். மனம் பதைத்தது, பிள்ளையே சாப்பிடலையே, பசியால் கொதித்? வயிறைத் தண்ணீர் ஊற்றி அணைத்தாள். இந்தப் பணத்திற்கு என்ன வழி என்று மனம் புலம்பியது, கணவன் இறந்த பிறகு, இந்தப் பிள்ளையை வளர்த்துப் படிக்க வைப்பதற்குள் விழி பிதுங்கத்தான் செய்தது. ஏழ்மையில் பிறந்து வளர்ந்தவள் என்பதால் ஆண்பிள்ளை இல்லாமல் போனாலும் பயமின்றி வாழ்வு சீராய் ஓடிக் கொண்டு இருந்தது. பொன்னுத்தாயின் இலட்சியமே கதிரேசனைப் படிக்க வைப்பதுதான். பொழுது விடியும் வரை இமை மூடாமல் யோசித்தவள் காலையில் முதல் வேலையாய்ச் சண்முகத்தைச் சந்திக்க சென்றாள்.
என்ன பொன்னுத்தாயீ ! உனக்குத் தெரியாதா? இது மாசக்கடைசி நானென்ன செய்ய முடியும்? நீயும் ரொம்பவும் அவசரமின்னு வேற சொல்றே.. ஒரு வழியிருக்கு. ஆனா நீ ஒத்துப்பியான்னு...? அவர் சந்தேகமாய் இழுக்க,
நீங்க இருங்க சித்தப்பா, நான் சொல்றேன். என்று ஒரு இளைஞன் முன்னால் வந்தான்.
அம்மா எங்க கல்லூரியிலேயே ஒரு ஓவியப் போட்டி இருக்கு, இந்தியாவின் வறுமைக் கோடுங்கிற தலைப்பில் சில படங்கள் வரையணும். அதுக்கு படத்தின் மாதிரியா நீங்க வரமுடியுமா? என்று கேள்வியெழுப்பினான். உங்களுக்கு 1000 ரூவா கிடைக்கும். நான் ஏற்பாடு பண்றேன்.
நன்றி தம்பி ! நான் என் உயிரைத் தரவும் சித்தமாய் இருக்கிறேன். என்றாள். நைந்து, கிழிந்து போன புடவை, சல்லடையாய் ரவிக்கை, ஏறக்குறைய முக்கால் நிர்வாணமாய் நிற்க வேண்டும் என்றதும், உயிரே போவது போலிருந்தது பொன்னுத்தாய்க்கு !
என்ன சாமி இது? இங்கே இருக்கிறே பிள்ளைகளுக்கு எம்மவன் வயசுதான் இருக்கும். அதுங்க முன்னாடி போய்...! வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொள்ள அழுதாள். கண்கள் அருவியைக் கொட்டின. பொன்னுத்தாயை அழைத்து வந்த இளைஞன் முன் வந்தான். அம்மா ! நாங்களும் உங்களை அம்மாவைப் போல்தான் நினைக்கிறோம். தவறான நோக்கு ஏதும் இல்லைம்மா, உங்கள் தேவைக்கு இதில் பணமும் கிடைக்கிறதல்லவா ?
பணம்..! கதிரேசனின் சாப்பிடாத கவலை தோய்ந்த முகம் ஒருமுறை கண்ணின் முன் வந்து போனது. சரியென்று தலையசைத்தாள். உணர்ச்சியற்ற அந்த முகம் தனை ஓவியத்தில் உணர்வுகளாகக் கொண்டு வந்தனர்.
கதிரேசனின் கையில் நூறு ரூபாய் நோட்டுகள் பளபளத்தன. அம்மான்னா அம்மாதான். சரிம்மா வர்றேன்! பிள்ளையின் முகமலர்ச்சிக்கு முன் தான் பட்ட வேதனை அனைத்தும் கரைந்து போனது பொன்னுத்தாய்க்கு! ஒரு வயதிற்குப் பிறகு பெற்ற தாயைக்கூடப் பார்க்க அனுமதிக்காத உடல், சற்றே துணி விலகிப்போனாலும் அதை பதறி மூடும் நெஞ்சம். அதை இன்று...! அதற்கு மேல் நினைப்பதே நெருப்பில் குளிப்பது போல இருந்தது. அனலான மனதை அடக்க வழியின்றி அமைதியாய் சரிந்து போனாள்,
கதிரேசன் நண்பன் சிவாவின் வீட்டின் முன் நின்றான். டேய் சிவா, என்னடா பண்ணிகிட்டு இருக்கே ?
கல்லூரியில் விழாவிற்காக ஓவியம் வரைஞ்சேன். எதிர்ப்பார்த்ததை விடவும் அற்புதமா அமைஞ்சு இருக்கு. நீயெங்கடா போயிட்டு வர்றே?
நம்ம ஆளு ப்ரியாவிற்கு இன்றைக்குப் பிறந்த நாள் இல்லையா? அவளுக்கு அசத்தலா ஒரு பரிசு தரலான்னு நினைச்சேன். பரிசு, விருந்துன்னு நல்லா சந்தோஷமாயிருந்து வர்றேன். இங்கே பாரு. காதலுடன் ப்ரியான்னு கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்காப் பாரு ! வழுவழுப்பான வாழ்த்து அட்டை ஒன்றைக் காண்பித்தான்.
டேய் பாவி, இதுக்கெல்லாம் உனக்குப் பணம் ஏதுடா?
எங்கம்மாகிட்டே பணம் வேணுமின்னு அழுதுகிட்டே கேட்டேன். ராத்திரி சாப்பிடாம படுத்திட்டேன். மறுநாளே பணம் கிடைச்சிட்டது.
பாவம்டா அவங்க ! என்ன கஷ்டப்படாறாங்களோ? இப்போ இது தேவையா ?
டேய் சிவா ! சில விஷயங்களைக் கிடைக்கும்போதே அனுபவிச்சிடணும்,
சரி இந்தப் படத்தைப் பாரேன். சிவா காட்டிய திரையில் அழுக்காய் நைந்து போன பழைய கிழிசல் உடையில் பாதி உடல் தெரிய, கலைந்த தலையும் சோகம் அப்பிய கண்ணுமாய்...!
பாவம்டா,,, என்ன அவசரத் தேவையோ? பணம் வேணுமின்னு இப்படி போஸ் தந்தாங்க. ஆனா நம்ம பிரண்ட்ஸ் முன்னாடி நிற்க அவங்க பட்ட பாடு! சிவாவின் எந்தப் பேச்சும் கதிரேசனின் காதில் விழவில்லை, அம்மா! என்னும் அலறலோடு வீடு நோக்கி ஓடினான் அவன்.
ச்சே ! எத்தனை கேவலமான மனிதன் நான். அம்மா என்னை மன்னித்துவிடுங்கள். எனக்காக எத்தனை பெரிய தியாகம் செய்து விட்டீர்கள்.
வீட்டின் முன் ஓரே கூட்டம். என்ன என்னவென்று மனம் பதைத்தது. பக்கத்து வீட்டு அஞ்சலை இவனைக் கட்டிக் கொண்டு அழுதாள். தம்பி ! உங்கம்மா போய்ச் சேர்ந்திட்டா அய்யா !
உன்னை அநாதையா விட்டுட்டு ! என்றாள்.
கிடத்தப்பட்ட தாயின் சடலத்தின் முன் மண்டியிட்டு அமர்ந்தான். அந்த முகத்தில் தெரிந்த அமைதியே அவனைச் சுட்டது. நீ கவரிமான் ஜாதியம்மா. மகன் பொருட்டு உயிரை விட்டு விட்டாயே ?! ஆனால் நான்... அல்ப சந்தோஷத்திற்காக உனை ஏமாற்றி விட்டேனே ! அதற்காகத்தான் இனிமேல் இவனுடன் இருக்கக் கூடாதென்று போய்விட்டாயோ ! முதன் முதலாய்த் தாய் மீது உள்ள உண்மையான பாசம் வெளிப்பட, அம்மா என்று அழுதான் - பெருங்குரலெடுத்து !
----------------------------------------------------
லதாசரவணன்..........................