07 April 2012

வெள்ளி மலரே...


                                                                  அழகே உனை

ஆராதக்கிறேன்

வெள்ளி மலரால் அணிந்திட்ட

ஆடையை சூடி வரும்

மலை அருவிப் பெண்ணே

இளைப்பாரறிட மல்லிகையின் வாசம்

கோடி சுகம் உன் சாரலில்!

இரைச்சலாய் இசைந்த வீணையின் நாதம்

இளைப்பாரிட கோடி சுகம்

உன் மடி தேடும் கல்லாய் நான்!

தவிப்புகள் தகிக்கிறது,,,,,,,,

இமையோரம் சுடுநீராய்

கன்னப் பேழைக்குள்

முத்துச் சிதறல்கள்

பின்னலின் பின்னே

பின்னிக்கொண்ட

பூச்சரமானேன் நான்

பூவையே உன்

பூத்திருக்கும் புன்னகைக்கு

முன் முட்களும் பஞ்சு

மெத்தையாகிறது.

அதே புன்னகையை நீ

மறுக்கும்போது பஞ்சு

மெத்தையும் முள்ளாகிறது....

நீர் இன்று ஒட்டாமல் தாமரை

தவிக்கிறது

தேடிய இடமெல்லாம் நீர்

இன்றி தாகம் எடுக்கிறது

தாகம் தணிக்க காவிரியாய்

கவிதை நீர் எடுத்து

என் மனவாயிலில்

மயிலிறகான உன்

உணர்வுகளால் கோலமிடு

0 comments:

Powered By Blogger
Powered by Blogger.