07 April 2012

சுவாசமே,,,,,,,



                                                               பூவாய் மலர்வாய்

பூவையவளின் வாசத்தோடு,

தேகம் கொதித்த தாகம்

தணிக்க தேடியலைகிறேன்

உன் மோகம் தணிக்கும் பார்வையை...

காற்றில் சுவாசமாய்

நீக்கமற நிறைந்திருக்கும்

உன் வாசம் தேடி,

ஏக்கம் கலந்த பார்வைகளோடு

தவிக்கிறேன் துடிக்கிறேன்

தனியாய் தனித் தீவாய்

நட்பு நவிழும் போது ஆதியாய்

துடிக்கும் போது தோழமையின் தாயாய்

போர்வை போற்றப்பட்ட சுவாசம் சிறகுகள்

துள்ளித் திரியும் காலமும்,

துவண்டு விழும் நேரமும்

சுவாசங்களை பகிரும்

நினைவுகளை நிஜமாக்கும்

      நியதியாய்....மட்டும்தான்

   மகிழ மட்டும்தான்

 உன் நினைவுகள் என்றிருந்தேன்

பட்டுத்தான் பகிர்வுகளில் பலகாலம்

வாழ்ந்திருந்தேன்

நித்தம் நினைவுக்ள்

நிலையில்லா கனவுகள்

சுற்றும் விழிச் சுடரில்

சோதனைக் கருவிகள்........

உள்ளுணர்வுகள் பொய்த்துப் போகிறது

உவமையாய் நம் காதல் வாசிக்கப் படும் போது

நேசிக்கும் இரு குயில்களின் கூட்டிற்குள்
வாசிக்கும் கவிதைகள்

0 comments:

Powered By Blogger
Powered by Blogger.