திறப்புவிழா....
நீ ..................நீராய்
உடலைத் தழுவினாய்..
நிழலாய் சூடேற்றினாய்..
பார்வைகள் பாதமிருந்து
தவழ்ந்திட,
விரல் குழந்தை மெய்யதனில்
வீணை மீட்டிட,
நாதமென புறப்பட்ட
அந்த மொழி புரியா
விளக்கங்கள் காதோரம்
காவியக் கதை பாடிட!
நம்மிருவரையும் இன்று
குத்தகைக்கு எடுத்திருக்கும்
காமனின் மலர் கணைகள்
காதற் கவிதைகள் எழுதிட
துடிக்கிறது !
நெகிழ்ந்தது மனம்
மட்டுமல்ல
உடைகளும் தான்!
எழுதுகோலின்றி
வெள்ளைக் காகிதமின்றி
காதற் மை கொண்டு நீ
தீட்டிய ஓவியத்திற்கு !
இன்று காவியத்தலைவன்
நடத்து திறப்பு விழா.!
இமைகள் ஒன்றோன்றொன்று
தொடாமல் விலக்கி வைக்கின்றன
தூரம் போன தூக்கத்தை
தூக்கி வர தூதுவனின் துணை
தேடுகின்றேன்
நீ ..................நீராய்
உடலைத் தழுவினாய்..
நிழலாய் சூடேற்றினாய்..
பார்வைகள் பாதமிருந்து
தவழ்ந்திட,
விரல் குழந்தை மெய்யதனில்
வீணை மீட்டிட,
நாதமென புறப்பட்ட
அந்த மொழி புரியா
விளக்கங்கள் காதோரம்
காவியக் கதை பாடிட!
நம்மிருவரையும் இன்று
குத்தகைக்கு எடுத்திருக்கும்
காமனின் மலர் கணைகள்
காதற் கவிதைகள் எழுதிட
துடிக்கிறது !
நெகிழ்ந்தது மனம்
மட்டுமல்ல
உடைகளும் தான்!
எழுதுகோலின்றி
வெள்ளைக் காகிதமின்றி
காதற் மை கொண்டு நீ
தீட்டிய ஓவியத்திற்கு !
இன்று காவியத்தலைவன்
நடத்து திறப்பு விழா.!
இமைகள் ஒன்றோன்றொன்று
தொடாமல் விலக்கி வைக்கின்றன
தூரம் போன தூக்கத்தை
தூக்கி வர தூதுவனின் துணை
தேடுகின்றேன்


0 comments:
Post a Comment