மதுமிதா தன் சக நண்பர்களுக்கு எல்லாம் இனிப்பு வழங்கிக் கொண்டு இருந்தாள்.
ஹாய் மது எனிதிங் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் எல்லாம் தர்றீயே?
ம்.. நான் பிராஜெக்ட் மேனேஜரா பிரோமோட் ஆகியிருக்கேன் அதுக்குத்தான் எல்லாம்.
இஸிட்.... வாழ்த்துக்கள்
நன்றி
ஹேய் நரேனைப் பார்த்தியா?
இல்லை மது அவனுக்கு நைட் ட்யூட்டி முடிச்சிட்டு இப்போதான் ஜஸ்ட் வீட்டுக்குப் போனான்.
ஓ, காட்... ?! இன்னிக்கும் அவரைப் பார்க்க முடியலையே? எப்படியாவது இந்த மேட்டரை கன்வே பண்ணனுமின்னு நினைச்சேன்.
ஏன் நீ காலையிலே பார்க்கலையா?
இல்லையே?
போனில் சொல்ல வேண்டியதுதானே?
ச்சீ... நல்ல விஷயம் நரேன் கிட்டே நேரில்தான் ஷேர் பண்ணிக்கணும்.
பேசாம இன்னைக்கு லீவு போட்டுட்டு போய் பார்த்திட்டு வந்திடேன்.
லீவா மூச்... எத்தனை நாள் கனவு இராப் பகலா கஷ்டப்பட்டு உழைச்சது இதுக்காகத்தானே,,, இப்பபோய் எப்படி லீவு போடறது?
நரேன் கோவிச்சிக்கப் போறான்
ச்சீ... அவன் ரொம்பவும் அட்ஜெஸ்ட்டபுள் டைப் கோவிக்க மாட்டான்.
சரி எங்களுக்கு எல்லாம் பார்ட்டி எப்போ?
இன்னைக்கு நைட் என்று தன் அறைக்குள் நுழைந்தாள் மதுமிதா.
நரேன் பாதி தூக்கத்தில் வந்து எழுப்பியவர்களை சபித்தபடியே கதவைத் திறந்தான். அம்மா நின்றிருந்தாள்.
வாம்மா... எந்த வித சந்தோஷமும் இன்றி தாயை வரவேற்றான் நரேன்.
என்னடா மணி பணிரெண்டாவப் போகுது இன்னமும் கொட்டாவி விட்டுட்டு இருக்கிறே?
நைட்டு வேலையம்மா வா... உட்காரு
சாப்பிட்டியாடா?
ம்.. காலையிலே பிரட் சான்ட்விச்
மதுமிதா எங்கே?
ஆபீஸ்க்குப் போயிருக்கா? நீ ஏதாவது சாப்பிடறீயா
இல்லைடா வர்ற வழியிலே டீயும் பண்ணும் சாப்பிட்டேன்.
சரி போய் படும்மா,,, அப்புறம் ஹோட்டல்ல போய் வாங்கிட்டு வரேன்.
என்னது ஹோட்டல்யா ? வேண்டாம்டா சாமி எனக்கொண்ணும் அலுப்பில்லை, நான் சமைக்கிறேன் நீ போய் படு என்று அடுக்களைக்குள் நுழைந்த அபிராமி திகைத்துதான் போனாள். சலவைக்கல்லில் இழைத்தாற் போன்று இருந்தது அடுப்படி, அத்தனை பவுசு. இங்கனயே படுத்துக்கலாம் போல இருக்கே?! ம்.. நல்லாதான் வைச்சிருக்கா என் மருமவ?! இதென்ன பெட்டிமாதிரி ?
அடுக்களையில் கரண்ட் அடுப்பும், மைக்ரோவேவ் ஓவனும் இருந்தது. இதென்ன சமைக்கட்டில் என்னனென்னவோ இருக்கே? யோசனையோடு போய் மகனை எழுப்பினாள்.
என்னம்மா?
டேய் அடுப்பையேக் காணோம்டா?
என்னம்மா சொல்றே? உறக்கம் கலைந்த எரிச்சலோடு விரைந்தான். அதான் இருக்கே இரண்டுமே. இதுவும் அடுப்புதான்.
கடவுளே இதென்ன டிரங்குப்பெட்டி மாதிரி இருக்கு, இதுலே எனக்கு சமைக்கத் தெரியாது ராசா? காஸ் அடுப்பி இல்லையோ?
இல்லை, உனக்கு சாப்பாடு தானேம்மா வேணும். நான் வாங்கித்தர்றேன். கொஞ்சநேரம் என்னைத் தூங்க விடு,
காலையிலே அவ வேலைக்குப் போனாளே என்ன எடுத்திட்டுப் போனா?
யாருக்குத் தெரியும் எங்கேயாவது கேன்டீனில் சாப்பிட்டுப்பா? நீ போம்மா? என்று மறுபடியும் படுக்கச் செல்ல வயிறு லேசாய் பசித்தது. நேற்று இரவு பீசா சாப்பிட்டது தள்ளும்மா என்று எலக்ட்ரானிக் ஸ்டவ்வை பற்றவைத்து பாதிதண்ணீரைச் சூடு செய்து நூடுல்ஸ்ஸை மாசாலா போட்டு வேககைத்தான். வாம்மா சாப்பிடலாம்.
கிராமத்தில் அரைடவுஸரோட கஞ்சியும், ஊறுகாயும் தொட்டு சாப்பிட்ட மகன் தனக்கு பிஞ்சுக் கைகளால் ஊட்டியதும் நினைவுக்கு வந்தது. இப்போதும் அரை டவுஸர்தான் ஆனால் ஆள்தான் மாறிப்போயிட்டான். முள்ளுக் கரண்டியில் எதையோ சாப்பிடுவதைக் கண்டு, என்னய்யா இத புழு மாதிரியிருக்கு, பார்க்கவே குமட்டுதே? இங்கன வந்து இதையெல்லாமா திண்ணுற?
இது நூடுல்ஸ் மா,,,,! அம்மாவின் செய்கைகளைப் பார்த்தபிறகு, மேற்கொண்டு நரேனால் சாப்பிட முடியவில்லை,
நீ போடா எம் மருமவ வந்ததும் நான் சமைச்சு சாப்பிட்டுக்கிறேன். என்று சொல்லவும், நரேன் மறுபடியும் பெட்ரூம் சென்றான். அதற்குள் அவனின் கைபேசி அழைக்க,
எஸ் ஸார் நான் உடனே வர்றேன் அடுத்த ஐந்து நிமிடத்தில் குளித்து உடைமாற்றிக் கிளம்பிவிட்டான்.
ஏம்பா உடம்புக்கு முடியலைன்னு சொன்னே?
ஆபீஸ்லே கூப்பிடறாங்கம்மா?எப்படி வரமாட்டேன்னு சொல்ல முடியும், அவன் அன்னையின் பதிலுக்குக் கூட காத்திராமல் கிளம்பிவிட்டான்.
ஒரு வருடம் கழித்து பார்க்கிறேன் நல்லாயிருக்கியா என்று கூட மகன் கேட்காதது பெருத்த ஏமாற்றமாய் இருந்தது அபிராமிக்கு! எத்தனை கஷ்டப்பட்டு வளர்த்தாள். அத்தனை பெரிய வீட்டில் அபிராமி மட்டும தனித்து இருந்தாள். அக்கம் பக்கத்து வீடுகளெலில்லாம் பூட்டு தொங்கியது, இல்லை உள்ளே பூட்டியிருந்தது.யாருக்கும்
ஆண்ட்டி நீங்க எப்போது வந்தீர்கள்?
சாயந்திரம் நாலு மணிக்கும்மா?!
ஓஹோ.... ஒரு இரண்டு நிமிஷம் நான் ப்ரஷ்யாயிட்டு வரேன். என்று நகர்ந்தவள், கணவனிடம் போனில் பேசினாள். நரேன் உன் மதர் வந்திருக்காங்க நீயேன் எனக்கு இன்பார்ம் பண்ணவேயில்லை, இடியட் எனக்கு பிரமோஷன் கிடைச்சிருக்கு. இன்னைக்கு நைட் பிரண்ட்ஸ் எல்லாருக்கும் பார்ட்டி அலாட் பண்ணியிருக்கேன் உன்னை கூப்பிடலான்னு வந்தா நீயென்னடான்னா எங்கேயிருக்கே?
ஆபீஸில் போன் வந்தது. சரி அம்மாக்கு ஏதாவது தந்திட்டு நீ ஆபீஸ் வந்திடு நாம இரண்டு பேரும் பார்ட்டி என்ஜாய் பண்ணலாம். பட் உடனே கலந்துக்க முடியாது, நடுவில் வந்திடறேன்.
ஓகே...ஓ,கே... என்று குளித்துவிட்டு வேறு உடைக்கு மாறி கையோடு வாங்கிவந்த பிரைடுரைஸையும், பர்கரையும், பெப்ஸி பாட்டிலையும் எடுத்து டைனிங் டேபிளின் மேல் வைத்தாள் வாங்க ஆண்ட்டி சாப்பிடலாம்.
என்னம்மா இன்னமும் சமைக்கவே இல்லையே?
சமையலா,,, அதுக்கெல்லாம் எங்கே ஆண்ட்டி டைம் இருக்கு?! இதைவிட காமெடி என்னன்னு? நானும் நரேனும் நேருக்கு நேராக பார்த்தே ஒரு மாசமாச்சே?!
அது....?! ஏம்மா அவனுக்கும் உனக்கும் ஏதாவது பிரச்சனையா?
நத்திங் ஆன்ட்டி ? அவருக்கும் எனக்கும் டூயூட்டி மாறி மாாறி வரும், இப்போ எனக்கு நைட் டூயூட்டி பர்மிஷன் போட்டு வந்திருக்கேன். நைட்டு பார்ட்டி வேற இருக்கு.
உங்கப் பிள்ளை நேரா ஆபீஸீக்கு வந்திடுவார்.
ஏம்மா கேக்குறேன்னு தப்பா நினைக்காதே, இப்படி நீயொரு மூலையிலே அவனொரு மூலையிலே இருக்கவா கலியாணம் செய்து வைத்தேன். இப்படிக் குடித்தனம் நடத்தினா எப்ப
புள்ளக் குட்டின்னு ஆவுறது? சீக்கிரம் நான் சாவறதுக்குள்ளே ஒரு புள்ளையைப் பெத்துக் கொடுத்துடு தாயீ?!
ஓ... ஆன்ட்டி, நீங்க இன்னமும் அந்தக் காலத்திலேயே இருக்கீங்க, கல்யாணம் செய்துகிட்டா உடனே வயித்தைச் சாச்சிகிட்டு இருக்கணுமா? இன்பேக்ட் சாப்பிட ஏன் ஒருத்தருக்கொருத்தர் பார்க்கக் கூட டைமில்லை, எவ்ரிமினிட், நாங்க எல்லாரும் பிஸி? குழந்தை குட்டின்னு சில்லியா பீல் பண்ணமுடியாது. லீவ் இட் திஸ் சாப்படர். கிச்சன்ல பால் பவுடர் இருக்கு. கரைச்சு குடிங்க,
இன்ஸ்டென்ட் சப்பாத்தி பூரி செட் இருக்கு. ஓவனின் வைச்சி சூடு பண்ணி சாப்பிடுங்க, என் பிரண்ட்ஸ் எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க. நானும் உங்க பையனும் நாளைக்கு காலையிலே வர்றோம்.
என்று ஆசையாய் மருமகளின் கையால் சாப்பிடலாம் என்று வந்தவளின் எதிர்ப்பார்ப்பை உணராமல் பறந்தாள் மருமகள்.
பெரிய மாடி வீடு, வீடு முழுக்கச் சில்வர் வெள்ளிப் பாத்திரங்கள், அடுப்படியில் ஊரே படுக்கலாம் போல இருக்கும். மருமக வாயைத் திறந்தா இங்கிலீஷீதான் பேசுவா? ரொம்ப நல்ல போனா அப்படித் தாங்குவா என்றெல்லாம ஊரில் பேசியது நினைவிற்கு வந்தது. வீடு பெரிசுதான். ஆனால் பெற்றவளுக்கு ஒரு வாய் சோறு கூட போக முடியாத அளவுக்கு சிறியது. ரெடிமேடாய் சாப்பிடுபவர்களுக்கு அன்பும், தாய்மையும் ஏன் மனிதம் கூட ரெடிமேடாய் ஆகிவிடும் போல.... என்றெண்ணி நொந்து போன மனதோடு ஊருக்குக் கிளம்பினாள் அபிராமி என்னும் அந்தத்தாய் ,,,, !


0 comments:
Post a Comment