காதலியே நான் உனைத்தேடுகின்றேன்
நீ என் மனைவியானபிறகு…..
பார்வைப் பரிமாற்றங்கள் நிகழ்ந்த போதும்
நேசித்த விழிகளில் வழிந்த பாசத்தையும்…
என் காதலை நான் தவிப்பாய் சொன்ன போது
என்னிடமும் உன் பரிமாற்றம் இருந்த்து
என்று வெட்கமாய் நீ ,,,
சாலையோர மரங்களில் சாய்ந்தபடி
மலர்களின் வாசத்தோடு உன்
பெண்மையின் வாசத்தை நுகர்ந்த்தும்…
சாலை நனைக்கும்
நீரை தொட்டுவிட கொஞ்சி
கொஞ்சி விளையாட உன்
கொலுசுப் பாதங்களில் என்
நிழலை அடக்கியதும்,,,
படகின் முதுகில் மணிநேரங்கள் சாய்ந்திருந்து,
பல கதைகள் பேசியதும் உன் மடி
மீது தலைசாய்த்து நின்
வெண்டை விரல்களினால் நீ என் கேசம்
கோதிய போதும் சரணைந்தேனே உனை,,,,,
மஞ்சள் பூசி மல்லிகை வைத்து
பட்டுடுத்தி என் கைகள்
மங்கல நாணைப் பூட்டிட நீ குலுங்கிச்
சிரித்து கண்களில் நீரைக் கொட்டியபோது
கரைந்தேன் அந்த விழி நீரில்,,,,,,
மங்கிய விளக்கொளியில் மன்மதனின் அரவணைப்பில்
பொங்கிய மோகத்தை வழித்தெடுத்து
வைக்கும் பளிங்குக் கிண்ணமாய் நீ
ஜொலித்த போதும்…..
தேனிலவாய் தினமும் தித்தித்த
இரவுகளை கணக்கிட்டு பூ
நிலவென உன்னோடு ஒட்டி உறவாடிய தினங்களும்,,,
அன்று பொருட்காட்சியில் நீ பயம் கொண்டு
மிரண்டு அணைத்து உடலோடு உடலாக
ஒட்டிய தருணங்களிலும்,,,,,
வேர்வைக் களிப்பில் மேடிட்ட வயிரோடு
இடுப்பினைக் காவல் காத்த முந்தாணையில் என்
முகம் துடைத்த்தையும்….
அள்ளி மகிழ கொஞ்சி விளையாடிட என்
பிரதியாய் பிள்ளையை தந்த போதிலும்
என் அன்னையை உணர்ந்தேன் உன்னால்-?
நாட்கள் மலர்ந்து உதிர்ந்தன…
நரை பூத்திருந்த்து நம் பிறை ஓரங்களில்
இரு பிள்ளைகளை ஈன்ற தாயாய்,
சகோதரியாய், மருமகளாய் என
உன்னுள் பல அவதாரங்கள் இதில்
உன்னிலே உன்னைத் தேடுகிறேன்,
மனைவியான பின்னால் காதலியாக்கிட
காதலியாக்கிட ஏங்குகிறது நெஞ்சம்…
என் பழைய காதலியைக் காதலாய் காண…..
நீ என் மனைவியானபிறகு…..
பார்வைப் பரிமாற்றங்கள் நிகழ்ந்த போதும்
நேசித்த விழிகளில் வழிந்த பாசத்தையும்…
என் காதலை நான் தவிப்பாய் சொன்ன போது
என்னிடமும் உன் பரிமாற்றம் இருந்த்து
என்று வெட்கமாய் நீ ,,,
சாலையோர மரங்களில் சாய்ந்தபடி
மலர்களின் வாசத்தோடு உன்
பெண்மையின் வாசத்தை நுகர்ந்த்தும்…
சாலை நனைக்கும்
நீரை தொட்டுவிட கொஞ்சி
கொஞ்சி விளையாட உன்
கொலுசுப் பாதங்களில் என்
நிழலை அடக்கியதும்,,,
படகின் முதுகில் மணிநேரங்கள் சாய்ந்திருந்து,
பல கதைகள் பேசியதும் உன் மடி
மீது தலைசாய்த்து நின்
வெண்டை விரல்களினால் நீ என் கேசம்
கோதிய போதும் சரணைந்தேனே உனை,,,,,
மஞ்சள் பூசி மல்லிகை வைத்து
பட்டுடுத்தி என் கைகள்
மங்கல நாணைப் பூட்டிட நீ குலுங்கிச்
சிரித்து கண்களில் நீரைக் கொட்டியபோது
கரைந்தேன் அந்த விழி நீரில்,,,,,,
மங்கிய விளக்கொளியில் மன்மதனின் அரவணைப்பில்
பொங்கிய மோகத்தை வழித்தெடுத்து
வைக்கும் பளிங்குக் கிண்ணமாய் நீ
ஜொலித்த போதும்…..
தேனிலவாய் தினமும் தித்தித்த
இரவுகளை கணக்கிட்டு பூ
நிலவென உன்னோடு ஒட்டி உறவாடிய தினங்களும்,,,
அன்று பொருட்காட்சியில் நீ பயம் கொண்டு
மிரண்டு அணைத்து உடலோடு உடலாக
ஒட்டிய தருணங்களிலும்,,,,,
வேர்வைக் களிப்பில் மேடிட்ட வயிரோடு
இடுப்பினைக் காவல் காத்த முந்தாணையில் என்
முகம் துடைத்த்தையும்….
அள்ளி மகிழ கொஞ்சி விளையாடிட என்
பிரதியாய் பிள்ளையை தந்த போதிலும்
என் அன்னையை உணர்ந்தேன் உன்னால்-?
நாட்கள் மலர்ந்து உதிர்ந்தன…
நரை பூத்திருந்த்து நம் பிறை ஓரங்களில்
இரு பிள்ளைகளை ஈன்ற தாயாய்,
சகோதரியாய், மருமகளாய் என
உன்னுள் பல அவதாரங்கள் இதில்
உன்னிலே உன்னைத் தேடுகிறேன்,
மனைவியான பின்னால் காதலியாக்கிட
காதலியாக்கிட ஏங்குகிறது நெஞ்சம்…
என் பழைய காதலியைக் காதலாய் காண…..


0 comments:
Post a Comment