பனிக்குடம் தழும்பி தவிக்கின்ற தாயின்
நிறைகுடம் கிழித்து ரத்தச் சேற்றில் குளித்தபடி,
அழகான பூமியின் குளிரையும் வெயிலையும்
அனுபவிக்க அழவும் சிரிக்கவும் கற்றுக் கொண்டு
வெளியேறி ? செந்நிற வாய்திறந்து !
சூடான மார்புத் தட்டையின் பாலைச் சுவைத்து
பரிமாறி பஞ்சு மெத்தையில் படுத்துறங்கி
தவழ்ந்து விளையாடிட முழங்கால் முற்றிலும்
அச்சாய் தழும்புகள்!
பொம்மைச் சகாக்கள் அணிவகுக்க
பொய்க்கால் குதிரையில் பூவுலகம் சுற்றி ?
தாய்மடிச் சுகம்தனில் அமிழ்ந்திட்டேன்.
தோழமையின் தோளில் அமர்ந்து பரவி
விரிந்த பூவுலகில் பருவ வயதில்
பொங்கி எழுந்த திமிரை பூத்துக் குலுங்கிய
எழிலை காளையரின் பார்வைகள் குறுகுறுக்க,
தாவியணைத்தேன் தாவணியை?!
மூழ்கிக்கிடந்த உடைகளின் அடியில் உள்
மனம் விழித்துக் கொண்டு காதலுக்கென விழைந்தது,
தேடினேன் நானும் தேவனும் வந்தான்
தேன்சுளையென எனைச் சுவைத்தான்.
மயங்கினேன் அவன் மடியில் அள்ளியணைத்து
அதரமும் சுவைத்து காதல் குழைத்து
வரைந்தான் அவன் உருவம்தனை
என் வெற்றுடலில் ?!
காவியம் என நான் காத்திருக்க காதலன்
காணாமல் விடை கொடுக்க காலமகள்
எடுத்துரைத்தாள் என் காதலின் சான்றினை?!
காயாகி கனியாகி பூவாகி மலர்ந்து
மணம்பரப்பி நானே இன்று ஒரு அரக்கனைச்
சுமக்கிறேன்.
அரசனைப் படித்த நான் அரக்கனைப்
படிக்க தவறிவிட்டேன். இன்று உடற் கூட்டை
விட்டகன்று வெண்ணிற வானில் மேகமாய்
கலந்தேன்!
வானக்கூரையின் கீழ் உலகம்
எத்தனை காதல்களை சுமந்தபடி?
இழந்து போன என் காதலின்
சுவடுகளை நதிநரில் தேடியபடியே?
பிறக்கும் போதும் இறக்கும் போதும்
அழுகை ஒன்றே துணையாய்?!


0 comments:
Post a Comment