தோழமையின் தோழியே
நட்புச்சிறகுக்குள் எங்களை அடைகாத்து
சுவாசம் என்னும் தோளில் சுமந்து,
அச்சுமையையே சுகமாய் நேசிப்பவேளே
புத்தொளி தரும் உன் புன்னகைக்குள் எத்தனையோ
பொன்மணிகள் புதைந்திருக்கிறது.
மனத் துயரை துடைக்கும் வலிமை அதற்குண்டு
பட்டாசு பேச்சும், பகட்டில்லாத குணமும்
ததும்பி வழியும் அமுதசுரபி நீ
தோள் சாய தோள் கொடுத்தாய்
என் ஜன்னல் கம்பிகளுக்கு நடுவில்
வெண்ணிலவாய் வந்து தாலாட்டி விடுகிறாய்
இன்னொரு அன்னையாய மாறி சோறுட்டுகிறாய்
மனம் நோகும் நேரம் கனிவும், மகிழும் நேரம் பூரிப்பும், துவளும் நேரம் நெஞ்சுரமும் தந்து, கண்ணாடியின் பிம்பம் ஆகிறாய்...
என் நிழலாய் தொடர்ந்து, என் வெற்றியை பாராட்டி
சோம்பலை சீராக்கி, நித்தம் சாதனை படைக்க துணை நின்றவளே
என்றுமே உன் நட்பின் கதகதப்பில் கட்டுண்டு இருக்வே
விரும்புகிறோம்.....
இன்றல்ல இனிவரும் நாளிலும் நித்யமாய் ஆதவனைப் போலவே, உன் வாழ்வு ஒளி பெருகி, சந்திரனாய் குளிர்ந்த,நதியாய் ஆனந்தம் பெருக்கெடுத்து நீ வாழ, என் வாழ்த்துக்களோடு , பிராத்தனைகளும்....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி.........


0 comments:
Post a Comment