அமெரிக்காவில் சானிவென்னா குழந்தையைக் கடத்தி நகைப் பணத்திற்காக அதை கொலை செய்து தரைதளத்தில் புதைத்த அந்த கயவனின் முகத்தில் காறி உமிழ வேண்டும் போல உள்ளது. அவன் அந்தக் குடும்பத்தில் தொடர்புடையவன் எத்தனை முறை அங்கு வந்திருப்பான் அப்போதெல்லாம் அந்தக் குழந்தையை எந்தக் கண்ணோட்டத்தோடு பார்த்தானோ முட்டாள். ஒரு சிறு பிள்ளையின் உயிரைக் குடிக்க அந்த மனித மிருகத்திற்கு எப்படித்தான் மனம் வந்ததோ, அந்த மழலையின் சிரிப்பில் மயங்கிடத்தானே மனம் வரும் கொன்றிடவா தோன்றும். பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கு, கை கால் நன்றாகத்தானே இருக்கிறான் இவன் ஊதாரித்தனத்திற்கு பிஞ்சுதான் கிடைத்ததா ?
வடசென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் திருடு போகின்றன. நேற்று உறவினர் ஒருவரை பார்க்க அருகில் உள்ள குழந்தைப்பேறு மருத்துவமனைக்கு சென்றபோது குழந்தையைப் பறிகொடுத்த தாயின் நிலையை கண்ணாறக் காண வேண்டியிருந்தது. மனதை ரம்பமாய் இன்னமும் அறுத்துக்கொண்டு உள்ளது.
முன்விரோதம் காரணமாக குழந்தைகளைக் கொல்லுதல், நம்பி அனுப்பிய காரோட்டியே குழந்தைகளைக்கொன்று சாக்கடையில் வீசிய அவலம் இதையெல்லாம் நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறது. எத்தனை கோபம், முன்விரோதம், சுயநலம், இருந்தாலும் அதை காட்டும் இடம் மலர நினைக்கும் குழந்தைகள் அல்ல.
இதே போல் சில வருடங்களுக்கு முன்னால் நான் ஒரு நிகழ்வு நாங்கள் இருந்த வீட்டின் அருகாமையில். ஒரு ஒன்றரை வயதுக்குழந்தை அதன் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு மனித மிருகம். அதை தினமும் கொஞ்சுமாம். அன்றைய தினம் அதே போல் குழந்தையை கொஞ்சிட கொண்டு சென்றவன், சிறிது நேரம் கழித்து கொண்டு வந்து தொட்டிலில் போட்டு இருக்கிறான். நீண்ட நேரம் கழித்தும் குழந்தை அழாததைக் கண்ட அந்த குழந்தையின் தாய் அருகில் சென்று பார்க்க குழந்தை மூச்சுபேச்சின்றி இருந்ததாம், அப்போதுதான் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று அந்தத் தாய்க்கு தெரிந்திருக்கிறது.
விசாரணையில் அந்த மனித மிருகம் பிடிபட்டது, நடந்ததைப் பற்றிய விசாரணையினையில் அவன் சொன்ன விவரம் தான் மனதை தைத்தது, இப்படியும் ஒரு அவனை மனிதன் என்றே கூறிட தோன்றவில்லை, அந்தக் குழந்தை அன்று மிகவும் அழகாய்த் தெரிந்ததாம், அது மனதை மயக்கியதால் அவனின் அறிவு பிறண்டு விட்டது ,,,,,,,,, அதனால் அந்தக் குழந்தை அப்போதே மூச்சு நின்றது என்றானாம்,
இதே போல் தான் இப்போது சிறுமிகளுக்கு நிறைய தொல்லைகள் நடக்கப்படுகிறது. தாய் தந்தை வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். குழந்தைகளுடன் செலவிடும்நேரம் குறைகிறது அவர்களுக்கு,
நம் குழந்தைகள் இருக்கும் இடம் அருகில் உள்ளவர்கள் அவர்கள் உறவினர்களாகவே இருந்தாலும் சரி அவர்களிடம் பழகும் முறை குறித்தவற்றை நம் பிள்ளைகளுக்கு தெரிவிக்கணும்.
பெண்குழந்தைகளுக்கு தன்னிடம் பிறர் நடக்கும் முறையையும் தான் பிறரிடம் நடக்கும் முறையினையும் சொல்லித் தரவேண்டும். குழந்தைகளிடம் தவறான தொடுகைப்பற்றிய
விவரங்களைச் சொல்லித்தரவேண்டும். எல்லா வேலைகளையும் விடுத்து குழந்தைகள் சொல்வதையும் நாம் காது கொடுத்து கேட்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மனதில் உள்ளதையும், தான் வெளியுலகில் அறிந்து கொண்டவற்றையும் கூறுவார்கள். இம்மாதிரி சிறு வயதிலேயே வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகள், மனச்சிதைவுக்கு ஆளாகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. எனவே நம் குழந்தைகளை கண்ணாகக் காத்திட வேண்டும். அவர்களோட நேரம் செலவிட்டு , அவர்களின் கருத்துகளுக்கு காது கொடுத்திட வேண்டும்

0 comments:
Post a Comment